செய்திகள்
ஜான் கிளாட் கேரியாருடன் கமல்

கமல் ஹாசனின் நெருங்கிய நண்பர் காலமானார்

Published On 2021-02-09 09:46 GMT   |   Update On 2021-02-09 09:57 GMT
நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், எழுத்தாளருமான ஜான் கிளாட் கேரியார் காலமானார்.
சென்னை:

உலகின் முன்னணி எழுத்தாளர்களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜான் கிளாட் கேரியார் ஒருவர். 89 வயதான அவர், முதுமைசார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். பாரிசில் உள்ள வீட்டில் வைத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் காலமானார். இதனையடுத்து அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜான் கிளாட் கேரியார் மரணம் குறித்து பதிவிட்டுள்ளார். 

அதில், ‘தனது 90 ஆவது வயதில் அடியெடுத்து வைத்த உலகின், ஃபிரான்ஸ் நாட்டின், மிக முக்கிய எழுத்தாளரும், என் நண்பருமான ஜான் கிளாட் கேரியார் காலமானார். அவர் எழுத்துக்களும் மனித நேயமும் அவர் தொட்ட மனங்களால் தொடர்ந்து வாழும்’ என்று கமல் குறிப்பிட்டுள்ளார். 

எழுத்தாளர், நடிகர் மற்றும் இயக்குனராக பல படைப்புகளை வழங்கி உள்ள ஜான் கிளாட் கேரியார், தனது படைப்புகளுக்காக பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.
Tags:    

Similar News