பூதலூர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூதலூர் அருகே மது விற்ற 2 பேர் கைது
பதிவு: ஜனவரி 27, 2021 19:45
கைது
திருக்காட்டுப்பள்ளி:
பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் பூதலூர் அருகே உள்ள வெண்டயம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது
வெண்டயம்பட்டி குளக்கரையை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வெண்டையம்பட்டி காளியம்மன்
கோவில் தெருவைச் சேர்ந்த முருகானந்தம் (வயது45), ரெங்கசாமி (51) ஆகியோர் என்பதும், மதுவிற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2
பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த தலா 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.