செய்திகள்
புல்லாவெளி நீர்வீழ்ச்சி

பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

Published On 2021-01-25 09:52 GMT   |   Update On 2021-01-25 09:52 GMT
மலை கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்ததால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெரும்பாறை அருகே இயற்கை எழில் மிகுந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது.

பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, தடியங்குடிசை, குப்பமாள்பட்டி, கல்லக்கிணறு, ஆடலூர், பன்றிமலை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மலை கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க வருகின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், மோட்டார் சைக்கிள்களில் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்தனர். பின்னர் அவர்கள் நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News