செய்திகள்
வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் தார் சாலை ஓரத்தில் பிளாஸ்டிக்கழிவுகளை படத்தில் காணலாம்.

நொய்யல் அருகே சாலையோரத்தில் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Published On 2021-01-09 13:17 GMT   |   Update On 2021-01-09 13:17 GMT
நொய்யல் அருகே சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நொய்யல்:

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சொட்டையூரில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் வாங்கி வருகின்றனர். அதேபோல் டீக்கடைக்கு சென்று டீ வாங்கி வரும்போது கடைக்காரர் பிளாஸ்டிக் கவர்களில் டீயை ஊற்றி கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

பலகாரக் கடைகள், உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் கவர்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் தங்கள் வீடுகளில் சேகரமாகும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பல்வேறு வகையான பிளாஸ்டிக் கழிவுகள் தார் சாலை ஓரத்தில் பொதுமக்கள் கொட்டி வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பல்வேறு வகையான பிளாஸ்டிக் கழிவுகளால் மழைநீர் தேங்கி் அதில் புழுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் ஆயிரக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகி அருகாமையில் உள்ள வீடுகளில் குடியிருப்பவர்களை தீண்டி டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு வகையான மர்ம காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள், பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்களை வேலாயுதம் பாளையம்- நொய்யல் செல்லும் தார் சாலை ஓரத்தில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News