செய்திகள்
எல் முருகன்

தமிழக பாஜக சார்பில் ‘நம்ம ஊரு பொங்கல்’ கொண்டாட்டம் 9, 10-ந் தேதிகளில் நடக்கிறது

Published On 2021-01-04 02:03 GMT   |   Update On 2021-01-04 02:03 GMT
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ‘நம்ம ஊரு பொங்கல்’ கொண்டாட்டம் வருகின்ற 9, 10-ந் தேதிகளில் நடக்கிறது.
சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ‘நம்ம ஊரு பொங்கல்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வருகின்ற 9, 10-ந் தேதிகளில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ராமநாதபுரத்தில் 9-ந் தேதி காலை 10 மணிக்கு ‘நம்ம ஊரு பொங்கல்’ நிகழ்ச்சியை நான் (எல்.முருகன்) தொடங்கி வைக்க உள்ளேன். 10-ந் தேதி மேட்டுப்பாளையம் நிகழ்ச்சியில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கலந்து கொள்கிறார்.

இதே போன்று, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் குஷ்பு, முன்னாள் எம்.எல்.ஏ. ராதாரவி, இசை அமைப்பாளர் கங்கை அமரன், நடிகைகள் கவுதமி, நமீதா, கலை இலக்கிய பிரிவு மாநில தலைவி காயத்ரி ரகுராம் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் அனைத்து மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

ஒவ்வொரு இடத்திலும், ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடும் இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற இருக்கின்றன. ஆண்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெறும். தமிழகத்தின் பெருமையை மேலும் உயர்த்தும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் அமையும் என்பது உறுதி.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News