செய்திகள்
கரூர் அருகே பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட காட்சி

கரூர் அருகே பெண் மர்ம மரணம் - அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்

Published On 2021-01-03 13:14 GMT   |   Update On 2021-01-03 13:14 GMT
கரூர் அருகே பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர்:

கரூர் அருகே உள்ள திருமுக்கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி சுமதி (வயது 36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்குஇடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் சுமதி கூலி வேலைக்கு சென்று, மகன்களுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இதனால் அவருடைய உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதனால் வாங்கல் போலீஸ் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றில் இறந்த நிலையில் ஒரு பெண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரித்தனர். விசாரணையில், அந்த பெண் காணாமல்ேபான சுமதி என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சுமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று அரசு மருத்துவமனை முன்பு திரண்ட சுமதியின் உறவினர்கள், சுமதியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் உள்ளதாகவும் இதனால் மர்ம நபர்கள் அவரை கொலை செய்து இருக்கலாம்.

, மேலும் சாவிற்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை காந்திகிராமத்தில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயகுமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கரூர்-திருச்சி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News