செய்திகள்
அபராதம்

சேலத்தில் பம்பர்கள் பொருத்தப்பட்ட 22 வாகனங்களுக்கு அபராதம்

Published On 2021-01-02 10:18 GMT   |   Update On 2021-01-02 10:18 GMT
சேலத்தில் பம்பர்கள் பொருத்தப்பட்ட 22 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம்:

கார், மோட்டார் சைக்கிள்களின் முன்புறம் பம்பர்கள் பொருத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. விதிமுறைகளை மீறி பம்பர்கள் பொருத்தி வரும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ராஜராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சேலத்தில் வாகன சோதனை செய்து பம்பர்கள் பொருத்தி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ராஜராஜன் கூறும் போது, ‘தற்போது தயாரிக்கப்படும் கார்களில் காற்றுப்பை (ஏர்பேக்) அமைக்கப்படுகிறது. பெரிய அளவிலான பம்பர்கள் பொருத்தப்பட்ட கார்கள் விபத்தில் சிக்கும்போது காற்றுப்பை விரியாது. அப்போது காரில் உள்ளவர்களுக்கு பலத்த காயம் ஏற்படும். சில நேரங்களில் உயிர் இழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கார் உள்ளிட்ட வாகனங்களில் பம்பர்கள் பொருத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும். தற்போது வரை நடத்தப்பட்ட வாகன சோதனையில் பம்பர்கள் பொருத்தப்பட்ட 22 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது’ என்றார்.
Tags:    

Similar News