search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்கள் அபராதம்"

    • 8,655 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
    • கடந்த 22.01.2023 முதல் 28.01.2023 வரை அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ.10,000/-என அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை. இதனால் 8,655 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதையடுத்து 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் மூலம் தகவல் தெரிவித்து, கடந்த 22.01.2023 முதல் 28.01.2023 வரை அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த அழைப்பு மையங்களின் அழைப்பை ஏற்று 574 பேர் ஆஜராகி அவர்களது நிலுவை வழக்குகளை இணையதளம் மூலம் செலுத்தினார்கள். இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் 772 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக ரூ.80,55,500/-செலுத்தப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×