செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்

பென்னாகரத்தில் பா.ம.க.வினர் மனுகொடுக்கும் போராட்டம்

Published On 2021-01-02 08:38 GMT   |   Update On 2021-01-02 08:38 GMT
வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி பா.ம.க. சார்பில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
பென்னாகரம்:

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி பா.ம.க. சார்பில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் செல்வகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். வன்னியர் இளைஞர் சங்க துணை செயலாளர் சத்தியமூர்த்தி, தொகுதி அமைப்பு செயலாளர் சுதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக பென்னாகரம் சந்தை தோப்பில் இருந்து கடைவீதி, பஸ் நிலையம் வழியாக கோலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டத்தோடு ஊர்வலமாக வந்து பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தன், ரேணுகா ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் முருகன், கதிர்வேல், ராஜசேகர், செந்தில், முனுசாமி, முருகேசன், முருகவேல், அருணகிரி, துரைமுருகவேல், ராஜேந்திரன், ஊராட்சி மன்றத்தலைவர்கள் செந்தில், பிரகாஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் செண்பகவல்லி, அருள்மொழி, நகர நிர்வாகிகள் ஜீவா, பாலமுருகன், செல்வி, குமார், சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News