செய்திகள்
முட்டை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

Published On 2021-01-01 17:43 GMT   |   Update On 2021-01-01 17:43 GMT
நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர்.
நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 490 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 495 காசுகளாக உயர்ந்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

சென்னை-500, ஐதராபாத்-500, விஜயவாடா-521, மைசூரு-500, மும்பை-535, பெங்களூரு-500, கொல்கத்தா-563, டெல்லி-600.

முட்டைக்கோழி கிலோ ரூ.57-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News