செய்திகள்
கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த திறனாய்வு தேர்வை மாணவிகள் எழுதியபோது எடுத்த படம்

கரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான திறனாய்வு தேர்வு - 1,781 பேர் எழுதினர்

Published On 2020-12-28 14:07 GMT   |   Update On 2020-12-28 14:07 GMT
கரூர் மாவட்டத்தில் நடந்த 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான திறனாய்வு தேர்வை 1,781 பேர் எழுதினர்.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் நேற்று 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் மேல்படிப்பிற்கு செல்வதற்கு மத்திய அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு தேசிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதில், தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 14 மையங்களில் இந்த தேர்வை மாவட்டம் முழுவதும் இருந்து வந்த 1,781 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வை எழுதினார்கள்.

முன்னதாக தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்தனர். பின்னர் முககவசம் அணிந்து, சமுக இடைவெளியை கடைபிடித்து தேர்வு மையங்களில் அமர்ந்து தேர்வு எழுதினர். இதையொட்டி தேர்வு மையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News