செய்திகள்
பாம்பன் ெரயில் பாலத்தில் புதிதாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

பாம்பன் ரெயில் பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன

Published On 2020-12-23 00:45 GMT   |   Update On 2020-12-23 00:45 GMT
பாம்பன் ரெயில் பாலத்தில் மேலும் இரண்டு இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்கு நடுவே அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. 104 ஆண்டுகளை கடந்துவிட்ட இந்த பாம்பன் ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்கு பாலத்தில் ரெரயில்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் கண்டறிவதற்காக இரண்டு இடங்களில் ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்கள் ஒரு ஆண்டிற்கு முன்பு பொருத்தப்பட்டன.

இந்தநிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் மேலும் இரண்டு இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாம்பனில் புதிய ரெயில் பால பணிகளுக்காக கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவைகள் அடுத்தடுத்து ரெரயில் பாலத்தின் தூண்களில் மீது மோதிய நிலையில் மிதவைகள், இரும்பு கம்பிகள் இரவு நேரங்களில் பாலத்தின் மீது மோதுவதை கண்காணிப்பதற்காகவும், பாலத்திற்கு வந்து செல்லும் நபர்களை கண்காணிப்பதற்காகவும் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News