செய்திகள்
கோப்புபடம்

ஊதிய உயர்வு வழங்கக்கோரி உதவி வேளாண்மை அலுவலர்கள், அமைச்சரிடம் மனு

Published On 2020-12-22 14:33 GMT   |   Update On 2020-12-22 14:33 GMT
தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
தர்மபுரி:

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், தமிழக அரசின் பிற துறைகளில் பட்டய படிப்பை கல்வி தகுதியாக கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை வேளாண்மைத்துறையில் பணியாற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறோம். 

சமீபத்தில் ஊதிய குறைதீர் குழுவில் வேளாண்மை பொறியியல் துறையில் பணியாற்றி வரும் பட்டய படிப்பு கல்வி தகுதி கொண்ட அலுவலர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் 10, பிளஸ்-2 மற்றும் 2 ஆண்டு வேளாண்மை பட்டயப்படிப்பு முடித்த உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு இன்னும் ஊதியம் உயர்த்தப்படாமல் உள்ளது. எனவே உயர்த்தப்படாமல் உள்ள ஊதியத்தை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News