செய்திகள்
மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின் தலைமையில் திமுக கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது- முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Published On 2020-12-20 04:57 GMT   |   Update On 2020-12-20 04:57 GMT
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கியதுடன், முதல் நாளில் பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். பொங்கல் பண்டிகைக்கு அரிசி ரேஷன் கார்டுகளுக்கு தலா 2500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது அரசியல் அரங்கில் விவாதப்பொருளாக மாறி உள்ளது.

இந்த சூழ்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இக்கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட, மாநகர செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். சட்டசபை தேர்தல் பிரசார திட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது.

கூட்டம் முடிந்ததும் ஸ்டாலின் சுற்றுப்பயண விபரத்தை கட்சியின் முதன்மை செயலர் கே.என்.நேரு பத்திரியாளர்களிடம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
Tags:    

Similar News