செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்

அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

Published On 2020-12-17 07:49 GMT   |   Update On 2020-12-17 07:49 GMT
கிறிஸ்துமஸ் விழாவில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
சென்னை:

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பெரு விழாவை சிறப்பாக கொண்டாட அ.தி.மு.க. ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. சார்பில் வருகின்ற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் உள்ள கன்வென்‌ஷன் ஹாலில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அழைப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும், மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கிறிஸ்துமஸ் விழாவில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதனால் விழாவை பிரமாண்டமாக நடத்த அ.தி.மு.க. ஏற்பாடு செய்து வருகிறது.

அ.தி.மு.க. கிறிஸ்துமஸ் விழா கொண்டாடும் இதே தேதியில் தான் (20-ந்தேதி) தி.மு.க.வும் சென்னையில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாடுகிறது. கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மயிலாப்பூர் சாந்தோமில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News