செய்திகள்
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சேலம் அருகே விருதுநகர் வட்டார போக்குவரத்து பெண் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

Published On 2020-12-14 02:38 GMT   |   Update On 2020-12-14 02:38 GMT
சேலம் அருகே விருதுநகர் வட்டார போக்குவரத்து பெண் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை செய்தனர். அப்போது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
சேலம்:

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும், வாகன சோதனை சாவடிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதேபோல் விருதுநகர் அருகே சத்திரெட்டியபட்டி பகுதியில், விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வியின் காரிலும் சோதனை செய்தனர். இதில் அந்த காரில் ரூ.24 லட்சம் மற்றும் 117 பவுன் தங்க நகைகள் இருந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், விடிய, விடிய கலைச்செல்வியிடம் விசாரணை செய்தனர். மேலும் கலைச்செல்விக்கு சொந்தமான சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில், உள்ள 2 வீடுகளிலும் சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News