செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள்: நாளை மறுநாள் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

Published On 2020-12-12 02:12 GMT   |   Update On 2020-12-12 02:12 GMT
தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கும் திட்டத்தை, நாளை மறுநாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கிவைக்கிறார்.
சென்னை:

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதற்கேற்ப நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னையில் தொடங்கி வைக்கிறார். சென்னையில் 15 இடங்களில் இந்த மினி கிளினிக்குகள் திறக்கப்படும். அடுத்ததாக 16-ந்தேதி சேலம் மாவட்டம் எடப்பாடியில், அந்த மாவட்டத்துக்குரிய 40 மினி கிளினிக்குகளை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள். மேலும், இந்த மாத இறுதிக்குள் அனைத்து மினி கிளினிக்குகளும் தொடங்கப்பட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த மினி கிளினிக்குகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

கிராமப்புறங்களில் மட்டும் 7 மணி வரை திறந்திருக்கும். இந்த மினி கிளினிக்கில் ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள். தற்போது தமிழ்நாட்டில் 1,851 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கும் நிலையில், 8 கி.மீ.க்கு ஒரு மருத்துவமனை இருக்கிறது. இந்த மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்ட பிறகு, 3 கி.மீ.க்கு ஒரு மருத்துவமனை இருக்கும்.

இந்த மினி கிளினிக்குகள், கொரோனா தொற்று இருக்கிறதா? என்பதையும் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு, பெரிய மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News