செய்திகள்
கல்லூரி மாணவர்களுக்கு சப்-கலெக்டர் வைத்திநாதன் விழிப்புணர்வு ஏற்படுத்தியபோது எடுத்தபடம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வந்த கல்லூரி மாணவர்களை பூ கொடுத்து வரவேற்ற சப்-கலெக்டர்

Published On 2020-12-11 09:20 GMT   |   Update On 2020-12-11 09:20 GMT
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வந்த கல்லூரி மாணவர்களை பூ கொடுத்து சப்-கலெக்டர் வரவேற்றார்.
கிணத்துக்கடவு:

கிணத்துக்கடவில் புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு, பஸ் நிலைய பகுதியில் நடைபெற்றது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன் கலந்துகொண்டு முகாம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பதாகையில் கையெழுத்திட்டார். பின்னர் கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து 18 வயது பூர்த்தியடைந்த கல்லூரி மாணவர்கள் ஆவலோடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வந்தனர். அவர்களை சப்-கலெக்டர் பூ கொடுத்து வரவேற்று வாழ்த்தினார். மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் சப்-கலெக்டர் வைத்திநாதன் கூறியதாவது:-

18 வயது பூர்த்தி அடைந்த மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் தன்னுடன் படிக்கும் பிற மாணவர்களையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஊக்கப்படுத்த வேண்டும். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், கிணத்துக்கடவு தாசில்தாரை அணுகி தீர்வு காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.இதில் கிணத்துக்கடவு தாசில்தார் ஸ்ரீதேவி, பேரூராட்சி செயல் அலுவலர் கதிர்வேல், தேர்தல் பிரிவு தாசில்தார் ரேணுகாதேவி, மண்டல துணை தாசில்தார் சிவகுமார், வருவாய் ஆய்வாளர் ராமராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News