செய்திகள்
முக ஸ்டாலின்

சோனியா காந்திக்கு முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

Published On 2020-12-09 11:14 GMT   |   Update On 2020-12-09 11:14 GMT
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்கள் இன்று தனது 74வது பிறந்தநளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்களும் ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், 

நவீன, மதச்சார்பற்ற இந்தியாவை கட்டமைத்ததில் சோனியாவின் பங்கு மிகவும் முக்கியமானது. சோனியா காந்தி மேலும் பல ஆண்டுகள் மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
Tags:    

Similar News