செய்திகள்
நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்

அலங்காநல்லூர் அருகே கனமழை- நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்

Published On 2020-11-30 04:54 GMT   |   Update On 2020-11-30 04:54 GMT
அலங்காநல்லூர் அருகே கனமழை பெய்ததால் பல கிராமங்களில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அலங்காநல்லூர்:

அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி பகுதியில் முல்லை பெரியாறு பிரிவு கால்வாய் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது கதிர்களாகி அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன. இந்தநிலையில் தற்போது அலங்காநல்லூர் பகுதியில் கனமழை பெய்தது.

இந்த மழையினால் அச்சம்பட்டி, பண்ணை குடி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News