சமஸ்கிருத செய்தி தொகுப்பை பொதிகை மற்றும் பிற மாநில மொழி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உத்தரவிட்டிருப்பதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமஸ்கிருத செய்தி தொகுப்பு குறித்த உத்தரவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
பதிவு: நவம்பர் 30, 2020 01:32
முக ஸ்டாலின்
சென்னை:
சமஸ்கிருத செய்தி தொகுப்பை நாள்தோறும் பொதிகை மற்றும் பிற மாநில மொழி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தூர்தர்ஷன் மண்டல தொலைக்காட்சி நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத்தியில் பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே இந்தி - சமஸ்கிருத திணிப்பை மட்டுமே மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் 15 ஆயிரம் பேரால் மட்டுமே பேசப்படும் வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியிலான செய்தி அறிக்கையை தமிழ் மற்றும் பிற மொழி பேசும் மக்களிடம் திட்டமிட்டு திணிப்பது, தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்ற பகிரங்க பண்பாட்டு படையெடுப்பாகும்.
சமஸ்கிருத திணிப்பை திரும்பப் பெறாவிட்டால் உடைய போவது மத்தியில் ஆட்சி செய்வோரின் ஆணவப் போக்கும், அதிகார மமதையும்தான் என தெரிவித்துள்ளார்.
Related Tags :