தேமுதிக பிரமுகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 14-ந் தேதி இறந்து போனார். அவரது குடும்பத்திற்கு எல்.கே.சுதீஷ் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
தேமுதிக பிரமுகர் குடும்பத்துக்கு எல்.கே.சுதீஷ் ஆறுதல்
பதிவு: நவம்பர் 29, 2020 13:57
எல்.கே.சுதீஷ் நிதியுதவி வழங்கிய போது எடுத்த படம்.
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர தே.மு.தி.க. செயலாளராக இருந்தவர் வெங்கடேசன். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 14-ந் தேதி இறந்து விட்டார்.
இந்த நிலையில் ஆம்பூர் மோட்டு கொல்லை (மளிகை தோப்பு) பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த தே.மு.தி.க. மாநில செயலாளர் எல்.கே.சதீஷ் ரூ.50 ஆயிரம் நிதியுதவியை வழங்கி அவரது தாயார், மனைவி, மகன், மற்றும் மகள் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
அவருடன் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை பகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சென்றிருந்தனர்.
Related Tags :