கொட்டும் மழையில் செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
கொட்டும் மழையில் செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு
பதிவு: நவம்பர் 25, 2020 13:35
செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்து போது எடுத்த படம்.
சென்னை:
நிவர் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்துவருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கியதையடுத்து, முன்னெச்சரிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. 19 மதகுகளில் 7 மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் கால்வாய் வழியாக அடையாற்றில் சேர்ந்து கடலில் கலக்கும்.
2015ம் ஆண்டு பெருவெள்ளத்தின்போது தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்பட்டுள்ளது.
24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று மதியம் 22 அடியை நெருங்கியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு சென்றார். கொட்டும் மழையில் குடை பிடித்தபடி அவர் ஆய்வு செய்து வருகிறார்.