செய்திகள்
கோப்புபடம்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 113 பேர் மீது வழக்கு

Published On 2020-11-16 11:19 GMT   |   Update On 2020-11-16 11:19 GMT
கரூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 113 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் நேற்று முன்தினம் தீவிர சோதனை நடத்தினர். 

இதில் கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 17 பேர் மீதும், பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேர் மீதும், தாந்தோணிமலை பகுதியில் ஒருவர் மீதும், வெள்ளியணையில் 3 பேர் மீதும், வெங்கமேடு பகுதியில் 4 பேர் மீதும், வாங்கல் பகுதியில் 9 பேர் மீதும், அரவக்குறிச்சியில் 7 பேர் மீதும், சின்னதாராபுரத்தில் 2 பேர் மீதும், க.பரமத்தியில் 10 பேர் மீதும், தென்னிலையில் 8 பேர் மீதும், வேலாயுதம்பாளையத்தில் 7 பேர் மீதும், குலித்தலையில் 10 பேர் மீதும், லாலாபேட்டையில் 8 பேர் மீதும், மாயனூரில் 20 பேர் மீதும், தோகைமலையில் ஒருவர் மீதும், சிந்தாமணிபட்டியில் 3 பேர் மீதும் என மொத்தம் 113 பேர் மீது புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News