செய்திகள்
முககவசம்

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளுக்கு முககவசம் அணிவிக்கப்பட்டு விழிப்புணர்வு

Published On 2020-11-10 08:50 GMT   |   Update On 2020-11-10 08:50 GMT
தஞ்சாவூரில் தொல்காப்பியர் சதுக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான தலையாட்டி பொம்மைகளுக்கு முக்கவசம் அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் தடுப்பூசி ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. எனவே முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது தான் கொரோனா பரவாமலும், வராமலும் தடுக்க முடியும்.

இந்நிலையில் தஞ்சாவூரில் தொல்காப்பியர் சதுக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான தலையாட்டி பொம்மைகளுக்கு முக்கவசம் அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வழியாக செல்பவர்களில் யாரேனும் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட தலையாட்டி பொம்மையை பார்த்து அருகே உள்ள கடைகளில் முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். இந்த வித்தியாசமான விழிப்புணர்வு செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிகிறது.

Tags:    

Similar News