செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அரசு ஆஸ்பத்திரிகளுக்கு 95 சிறப்பு மருத்துவர்கள் நியமனம்- முதலமைச்சர் ஆணை வழங்கினார்

Published On 2020-11-04 08:40 GMT   |   Update On 2020-11-04 08:40 GMT
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 95 சிறப்பு மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சென்னை:

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் புதிய சேமிப்பு கலன்கள் மற்றும் ஏற்கனவே இருந்த குறைந்த சேமிப்பு கலன்களுக்கு பதிலாக உயர் கொள்ளளவு சேமிப்பு கலன்கள் 11 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு வருகிறது.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 95 சிறப்பு மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 8 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயி லாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 551 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 5 நபர்களுக்கு பணிநியமன ஆணை களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News