செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்ட முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Published On 2020-10-23 05:54 GMT   |   Update On 2020-10-23 05:54 GMT
புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
சென்னை:

தமிழகத்தில் சமீபத்தில் 4 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களாக பிரிந்தது.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களாகவும், நெல்லை மாவட்டம், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. அந்த வகையில் 5 மாவட்டங்கள் புதிதாக உருவாகியுள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். ரூ.119.21 கோடி மதிப்பில் செங்கல்பட்டு, ரூ.104 கோடியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது

ஏற்கனவே திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டி உள்ளார். 5 புதிய மாவட்டங்களில் தென்காசிக்கு மட்டும் ஆட்சியர் அலுவலகம் கட்ட இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை.
Tags:    

Similar News