செய்திகள்
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்- கொள்முதல் நிலையத்தில் காத்துக் கிடக்கும் விவசாயிகள்

Published On 2020-10-18 09:31 GMT   |   Update On 2020-10-18 09:31 GMT
தஞ்சாவூரில் பெய்து வரும் தொடர் மழையால், நனைந்த நெல் மூட்டைகளோடு விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காத்து கிடக்கின்றனர்.
தஞ்சாவூர்:

அக்டோபர் 1ஆம் தேதி முதல், தற்போது வரை கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கிற்கு மாற்றப்படாததால், ஒவ்வொரு நிலையத்திலும் சுமார் 5 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் தேங்கிக் கிடக்கின்றன. இதன் காரணமாக விவசாயிகளிடம் இருந்து புதிதாக நெல்மூட்டைகள்  கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நெல் கொள்முதல் நிலையம் முன்பாக அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளோடு விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். இந்த நிலையில் 2 தினங்களாக பெய்து வரும் மழையால், நெல் மணிகள் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு, நெல் கொள்முதலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News