செய்திகள்
முக ஸ்டாலின்

சொத்துவரி செலுத்துவோருக்கான ஊக்க தொகையை அதிகரிக்க வேண்டும் - முக ஸ்டாலின் வலியுறுத்தல்

Published On 2020-10-17 13:10 GMT   |   Update On 2020-10-17 13:10 GMT
சொத்துவரி செலுத்துவோருக்கான ஊக்க தொகையை அதிகரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், அரசு கடந்த மார்ச்சில் இருந்து ஊரடங்கை அமல்படுத்தி வந்தது.  பின்னர் அவற்றில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  எனினும், பொருளாதார தேக்கநிலையில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.  இதனால், வேலை, தொழில், சுயதொழில், வர்த்தகம் உள்ளிட்டவை பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன.

பொதுமக்களின் வருவாய் பெரிதும் குறைந்துள்ளது.  இந்நிலையில், மக்கள் தங்களது அன்றாட பணிகளை கவனிக்கவே வழியில்லாத சூழலில், அரையாண்டு சொத்துவரியை 15 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் 2 சதவீத அபராத தொகை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

இதுபற்றி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், அரையாண்டு சொத்துவரியை 15 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் 2% அபராதம் என சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது கொரோனா பாதிப்பு காலத்தில் மக்களை நச்சரிப்பதாகும்!  ஊழலின் ஊற்றுக்கண்ணான சென்னை மாநகராட்சியில் சொத்துவரி வசூலில் கெடுபிடிகள் ஏன்?  அவகாசத்தை 45 நாட்கள், ஊக்கத்தொகையை 10% என அதிகரித்திடுக! என்று அவர் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News