செய்திகள்
மருத்துவ முகாம்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும்1,500 ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை

Published On 2020-10-17 09:48 GMT   |   Update On 2020-10-17 09:48 GMT
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் 1,500 ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:

நகரங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தும்படி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அனைத்து நகரங்களின் சுகாதார பணியாளர்களுக்கு கடந்த 12-ந்தேதி முதல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் திண்டுக்கல் நகரை பொறுத்தவரை சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் என மொத்தம் 1,500 பேர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு திண்டுக்கல் நகரில் அமைந்துள்ள 4 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. அதில் சளி, காய்ச்சல், இருமல், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அப்போது சளி, காய்ச்சல், இருமல் ஆகிய பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News