செய்திகள்
கஞ்சா

வாட்ஸ்-அப் குழு மூலம் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது

Published On 2020-10-12 13:54 GMT   |   Update On 2020-10-12 13:54 GMT
நசரத்பேட்டை பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ்-அப் குழு மூலம் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:

நசரத்பேட்டை பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ்-அப் குழு மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

இதுதொடர்பாக நசரத்பேட்டையை சேர்ந்த ஜஸ்டின் பிரபாகரன் (வயது 21), ஹேமகுமர் (21), சரண்ராஜ் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து பிரித்து வாட்ஸ்-அப் குழு மூலம் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

இவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News