செய்திகள்
கைது

திருச்சி அருகே சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசாரை கத்தியால் குத்த முயற்சி- அண்ணன், தம்பி உள்பட 4 பேர் கைது

Published On 2020-10-07 15:01 GMT   |   Update On 2020-10-07 15:01 GMT
திருச்சி அருகே கஞ்சா விற்றவர்களை பிடிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசாரை கத்தியால் குத்த முயன்ற பரபரப்பு சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராம்ஜிநகர்:

திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், ராபர்ட் மற்றும் 2 போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ராம்ஜிநகரை சேர்ந்த நியூ காட்டூர் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவில் அருகே சென்றபோது அப்பகுதியில் மறைவான இடத்தில் நின்ற 4 பேர் போலீசாரை கண்டதும் பையை தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.

இதைப்பார்த்த போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் வைத்திருந்த கத்தியால் போலீசாரை குத்த முயன்றனர். இருப்பினும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள், அதே பகுதியை சேர்ந்த பாரதிராஜா (வயது 40), அவரது தம்பி ஞானப்பிரகாசம் (35) மற்றும் காந்தி நகரை சேர்ந்த சங்கர் (50), மலைப்பட்டியை சேர்ந்த ரஜினிகாந்த் (47) என்பதும், அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே ராம்ஜிநகர் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வந்ததாகவும், அதுகுறித்த முழுமையான தகவலை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு சரியான முறையில் தெரிவிக்காத ராம்ஜிநகர் தனிப்பிரிவு போலீஸ்காரர் பாஸ்கர் மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News