செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகள் திறப்பு எப்போது?- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

Published On 2020-10-06 05:10 GMT   |   Update On 2020-10-06 05:10 GMT
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை:

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால் நாடு முழுவதும் பள்ளி-கல்லூரிகளை மூட கடந்த மார்ச் 16-ந்தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

பின்னர் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால், இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அதேநேரம் புதிய கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பல பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இந்தநிலையில் கடந்த ஜூன் 8-ந்தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது 5-வது கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் வருகிற 15-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

எனினும் பள்ளி, கல்லூரிகள் திறக்கும் விவகாரத்தில் அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களே இறுதி முடிவு எடுக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்றுள்ள அலுவல் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

பள்ளிகள் திறப்பு, தேர்வு, புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

Tags:    

Similar News