செய்திகள்
வயதான தம்பதி போராட்டம்

மகனிடம் இருந்து சொத்தை மீட்கக்கோரி மண்ணை தின்று வயதான தம்பதி போராட்டம்

Published On 2020-09-22 01:24 GMT   |   Update On 2020-09-22 01:24 GMT
திருச்சி நவலூர் அருகே மகனிடம் இருந்து சொத்தை மீட்கக்கோரி மண்ணை தின்று வயதான தம்பதி போராட்டம் நடத்தினர்.
திருச்சி நவலூர் குட்டப்பட்டில் வசித்து வரும் நாகராஜ்(வயது 62), சின்னபொண்ணு (61) தம்பதியினர் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து சிமெண்டு தரையில் மண்ணைக்கொட்டி அதை சாப்பிடும் போராட்டத்தை தொடங்கினர். இதையறிந்த கலெக்டர் சிவராசு அங்கு வந்து அவர்களிடம் என்ன கோரிக்கை என கேட்டார். அப்போது சின்னபொண்ணு, கலெக்டர் காலில் விழுந்து அழுதபடி முறையிட்டார். அப்போது அவர், தனது முதல் கணவருக்கு பிறந்த மகன் முருகன் 20 ஆண்டுக்கு முன்பே சொத்து முழுமையும் பறித்து கொண்டதாகவும், வசிப்பதற்கு வீடுகூட இல்லாமல் சாவியை பூட்டி எடுத்து சென்று விட்டார்.

எனவே, மகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டுத்தர வேண்டும் என்றார். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். இந்தநிலையில் கலெக்டரின் உத்தரவின்பேரில் சின்னபொண்ணு, இமாம் சமயபுரத்தில் உள்ள தனது இடத்தை முதல் கணவரின் மகன் முருகனுக்கு தானமாக எழுதி கொடுத்த பத்திரத்தை ரத்து செய்து லால்குடி கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்தார். இதுதொடர்பாக மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றால் கலெக்டரை சந்தித்து முறையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுபோல ஒருபெண் தனக்கு குடியிருக்க வீடு இல்லை என்றும், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும் கலெக்டர் காலில் விழுந்தார். இன்னொரு பெண், பாதாள சாக்கடை திட்ட அளவீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றஞ்ச்சாட்டி மனு கொடுத்தார்.
Tags:    

Similar News