செய்திகள்
கோப்புப்படம்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 25 ஆயிரம் ‘ரெம்டிசிவிர்’ மருந்துகள் சென்னை வந்தடைந்தது

Published On 2020-09-21 20:24 GMT   |   Update On 2020-09-21 20:24 GMT
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முதல்கட்டமாக 25 ஆயிரம் எண்ணிக்கையிலான மருந்துகள் சென்னைக்கு நேற்று வந்தது.
சென்னை:

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் ‘ரெம்டிசிவிர்’ போன்ற விலை உயர்ந்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தகைய மருந்துகளை தேவைக்கு ஏற்ப தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் கொள்முதல் செய்து வருகிறது.

இந்த நிலையில், 2 லட்சம் எண்ணிக்கையிலான ‘ரெம்டிசிவிர்’ மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு நிறுவனங்களிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதில், முதல்கட்டமாக 25 ஆயிரம் எண்ணிக்கையிலான மருந்துகள் சென்னைக்கு நேற்று வந்தது. இந்த மருந்துகளை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது எனவும், மீதமுள்ள 1 லட்சத்து 75 ஆயிரம் எண்ணிக்கையிலான மருந்துகள் அடுத்த மாதம் இறுதிக்குள் சென்னைக்கு வந்தடையும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News