செய்திகள்
நாமக்கல் முட்டை

நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 10 காசு உயர்வு

Published On 2020-09-21 07:52 GMT   |   Update On 2020-09-21 07:52 GMT
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.95ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்:

தமிழகத்தில், நாமக்கல், சேலம் மாவட்டத்தில் உள்ள, 900 பண்ணைகளில் 5 கோடி கோழிகள் மூலம் தினமும் 3.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலைக்கு பண்ணையாளர்களிடம் இருந்து, வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்கின்றனர்.

இந்த நிலையில் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அதிகரித்துள்ள‌து. நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிற மண்டலங்களில் விலை தொடர்ந்து முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளன.

அதன்படி 4.85 ஆக இருந்த முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.95ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. பிற மண்டலங்களில் ஆமதாபாத்தில் முட்டை விலை ரூ.5.40 ஆகவும், பெங்களூருவில் ரூ.5.15 ஆகவும், டெல்லியில் ரூ.5.03 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News