செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா நோயாளிகளுக்கு டேக் சிஸ்டம் அறிமுகம்

Published On 2020-09-21 06:09 GMT   |   Update On 2020-09-21 06:09 GMT
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு டேக் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் நோயாளிகள் வெளியே செல்வதை தடுத்து கண்காணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள டெங்கு சிறப்பு வார்டில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்களும், சாதாரண வார்டில் கொரோனா நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறப்பு வார்டுகளில் வயதான நோயாளிகளுடன் உதவியாளர் தங்க அனுமதி உள்ளது. சாதாரண வார்டுகளில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சர்வ சாதாரணமாக வெளியே சென்று டீ, காபி, டிபன் சாப்பிடுகின்றனர். இதனால் தொற்று பரவி வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன. இதனை கட்டுப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ‘டேக் சிஸ்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக அனுமதிக்கும் போது அவர்களது கையில் ஒரு ‘டேக்’ அணிவிக்கப்படும். இதில் நோயாளியின் பெயர், சேர்க்கை எண் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இதன் மூலம் நோயாளிகள் வெளியே செல்வதை தடுத்து கண்காணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News