செய்திகள்
கோப்புபடம்

நாகர்கோவில் நிலம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு

Published On 2020-09-17 12:17 GMT   |   Update On 2020-09-17 12:17 GMT
நாகர்கோவில் அருகே நிலம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் பறக்கை ஐ.எஸ்.இ.டி. நகரை சேர்ந்தவர் யூசப் (வயது 33). இவருக்கு வடிவீஸ்வரம் பகுதியில் சொந்தமாக 2 சென்ட் நிலம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை ஐ.எஸ்.இ.டி. நகரை சேர்ந்த வியாபாரியான முகமது முஸ்தபா (45) என்பவருக்கு ரூ.20 லட்சத்துக்கு விற்பனை செய்தார். தொடர்ந்து முகமது முஸ்தபா நிலத்தை அளவீடு செய்தபோது, 2 சென்டுக்கும் குறைவாக இருந்ததும், நிலம் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதனால் பணத்தை திரும்பி தரும்படி யூசப்பிடம் கேட்டுள்ளார். ஆனால் யூசப் பணத்தை கொடுக்கவில்லை.

இதுகுறித்து முகமது முஸ்தபா நாகர்கோவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கோட்டார் போலீசுக்கு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து நில மோசடியில் ஈடுபட்டதாக யூசப், அவரது மகன் புஸ்ரா, இடலாக்குடியை சேர்ந்த சேக் அகமது, முகமது மைதீன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News