செய்திகள்
வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்த காட்சி.

திமிரி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள்- கலெக்டர் ஆய்வு

Published On 2020-09-16 10:50 GMT   |   Update On 2020-09-16 10:50 GMT
திமிரி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார்.
கலவை:

திமிரி ஒன்றியத்தில் உள்ள மழையூர், நம்பித்தாங்கல், காவனூர் ஆகிய ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார்.

மறையூர் ஊராட்சியில் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணி, பசுமை வீடுகள், நம்பித்தாங்கல் ஊராட்சியில் குளம், காவனூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, நூறு நாள் வேலைத் திட்ட பணிகள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஊராட்சிகளில் நிலுவையில் உள்ள பணிகளையும் பார்வையிட்டார்.

அப்போது கலவை தாசில்தார் ரவி, கூடுதல் கலெக்டர் உமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், சித்ரா, மாவட்ட செயற்பொறியாளர் அருள், மண்டல தாசில்தார் ராஜலட்சுமி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News