search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி திட்ட பணி"

    • அங்கன்வாடி மையம், மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் சோதனை
    • பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா, என கேட்டறிந்தார்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பனப்பாக்கம், மேலபுலம், துறையூர், வெளிதாங்கிபுரம், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலப்புலம் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் குடியிருப்புகளில் ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பழுது நீக்குதல் மற்றும் சீரமைக்கும் பணிகளையும், ரூ.63.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் ரேசன் கடை, அங்கன்வாடி மையம், மேல்நிலை தண்ணீர் தொட்டி, பேவர் பிளாக் சாலை போன்ற பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து, பனப்பாக்கம் பேரூராட்சி தென்மாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் 2 பள்ளி வகுப்பறை கட்டிடம் ரூ.30.20 லட்சம் மதிப்பீட்டிலும், ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தொடக்கப்பள்ளி சமையல் கூடத்தினையும், நெல்லூர்ப்பேட்டை தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டிடம் ரூ.30.20 லட்சம் மதிப்பீட்டிலும், துறையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ.30.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 பள்ளி வகுப்பறை கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டார்.

    தொடர்ந்து மேலபுலம் ஊராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை துகள் செய்யும் எந்திர மையத்தினையும், வெளிதாங்கிபுரம் ஊராட்சி ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா, விநியோகம் செய்யப்படவுள்ள பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தார்.

    ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், சிவராம், உதவிப் பொறியாளர் ராஜேஷ். வட்டாட்சியர் பாலச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
    • பொறியாளர் கோமதிசங்கர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சி யில் நடைபெற்றுவரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம் ஏஞ்சல் மெட்ரிக் பள்ளிமுதல் திருவனந்தபுரம் ஊரணி வரை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தார் சாலையினையும், சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள பொது மயானத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.148.80 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம் நகராட்சி குட்பட்ட காமராஜர் நகர், நகராட்சி குடிநீர் தொட்டி அருகில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் ரூ.7.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பொது சமை யலறை கட்டிடங்களையும் கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்தும், தரமாகவும் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, இராஜபாளையம் நகராட்சி பொறியாளர் ரத்தினவேல், வட்டாட்சியர் ராமசந்திரன், இளநிலை பொறியாளர் கோமதிசங்கர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • முகையூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்தார்.
    • கலெக்டர் போர்க்கால அடிப்படையில் கழிவறை கட்டிடம் கட்டித் தர உத்தரவிட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்காக விழுப்பு ரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் வந்தார். அருளவாடி கிராமத்தில் 28 லட்சத்து 18 ஆயிரம் செலவில் பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி, மற்றும் ரூபாய் 5 லட்சத்து 51 ஆயிரம் செலவில் நடைபெற்று வரும் பள்ளி கட்டிடங்கள் பழுது நீக்கும் பணி, ரூ. ஒரு லட்சத்து 55 ஆயிரம் செலவில் நடைபெற்று வரும் நூலகம் பழுது நீக்கம் பணி ரூ. 3 லட்சத்து 52 ஆயிரம் செலவில் நடைபெற்று வரும் மினி பவர் பம்ப் கட்டும் பணி ஆகியவ ற்றையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து ஆற்காடு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 20 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பள்ளிக்கட்டிட த்தையும், வீரசோழபுரம் கிராமத்தில் ஊராட்சி ரூ. 42 லட்சத்து 65 ஆயிரம் செலவில் நடை பெற்று வரும் ஊராட்சி செயலக கட்டிடம் கட்டும் பணியை யும் பார்வையிட்டதுடன் பணியை தரமாக வும் விரைவாகவும் செய்து முடிக்க உத்தரவிட்டார்.

    முகையூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு திடீரென சென்ற மாவட்ட கலெக்டர் பழனி அங்கு சிகிச்சைக்கு வந்திருந்த மற்றும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நோயாளி களிடம் குறைகள் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து டாக்டர்களிடமும் ஏதேனும் குறைகள் உள்ளதா என கலெக்டர் பழனி கேட்டார். அப்போது மருத்துவம னைக்கு சிகிச்சை க்கு வரும் நோயாளி களுக்கு கூடுதலாக ஒரு கழிவறை வசதி செய்து தந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கலெக்டர் பழனி அருகில் இருந்த முகையூர் வட்டார வளர்ச்சி அலுவல ர்களிடம் நோயாளிகளில் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் கழிவறை கட்டிடம் கட்டித் தர உத்தரவி ட்டார். ஆய்வின்போது முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம் ,நாராயணன், கண்டாச்சி புரம் தாசில்தார் கற்பகம், உதவி பொறியாளர்கள் நாகராஜ் மற்றும் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • புதிதாக கட்டப்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பார்வையிட்டார்
    • அதிகாரிகள் உடன் இருந்தனர்

    போளூர்:

    திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் போளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்று வந்த வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று பார்வையிட்டார்.

    போளூர் அருகே உள்ள ஏந்துவாம்பாடி கிராமத்தில் புதிதாக கட்டப்படும் அரசு பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டார்.

    அதனையடுத்து முக்குறும்பை அரசு பள்ளி பழைய கட்டிடத்தை பார்வையிட்டார். கஸ்தம்பாடியில் சிமெண்ட் சாலையை பார்வையிட்டு பால்வார்த்து வென்றான் அங்கன்வாடி மையத்தையும் ஆய்வு செய்தார்.

    போளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை இடத்தையும், மின்சார தகனம் மேடையும், புதிதாக கட்டப்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும் பார்வையிட்டார்.

    இதில ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி போளூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தி பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் பி.ஏ வேலு, மேலாளர் அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ18.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுற்றுச் சுவர் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வெம்பக்கோட்டை யூனியன்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடை பெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சாத்தூர் யூனியன் சூரங்குடி ஊராட்சியில் பிரதமரின் ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ2.77லட்சம் மானியத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை யும், புது சூரங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ40.5 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டு வரும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் ரூ5.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய மிதிவண்டி நிறுத்தும் இடத்தையும், ரூ5.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமத்துவ மயான காத்திருப் போர் கூடத்தையும், மதிய உணவு திட்டத்தின் கீழ் ரூ5.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமைய லறைக் கூடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பந்துவார்பட்டி ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ22.65 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டி டத்தையும், மேலப்புதூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ18.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி களையும் கலெக்டர் ஜெய சீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், வெம்பக் கோட்டை யூனியன் கங்கரக்கோட்டை ஊராட்சி கீழசெல்லையாபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம் மூலம் ரூ6.65 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கதிரடிக்கும் தளத்தையும், கீழசெல்லையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மதிய உணவுக்கூட கட்டடத்தையும், மேட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய மதிய உணவு திட்டத்தின் கீழ் ரூ1.29 லட்சம் மதிப்பில் நடை பெற்று வரும் 2 வகுப்பறை கட்டிட பராமரிப்பு பணி களையும், ரூ.44ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் சமையலறை பரா மரிப்பு பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா உள்பட பலர் உடனிருந்தனர்.

    • தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்ற சோதனை
    • அதிகாரிகள் உடன் இருந்தனர்

    செங்கம்:

    செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பாலியப்பட்டு, பீமானந்தல் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சியை திட்டப் பணிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

    மேல்பெண்ணாத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை குறித்தும் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செங்கம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

    அப்போது செங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உள்கட்டமைப்புகள், தாய்-சேய் விடுதிகள், பிரசவ வார்டுகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தாசில்தார் முனுசாமி, மருத்துவ அலுவலர் (பொ) சவுத்ரி, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் உடனிருந்தனர்.

    இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பனை ஓலைப்பாடி, காரப்பட்டு, காஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அப்போது காஞ்சி அருகே வேளாண்மை துறை சார்பில் தரிசு நிலத்தில் உள்ள முள்வேலிகளை அகற்றி விவசாய நிலமாக மாற்றும் திட்டம் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • பெரணமல்லூர் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
    • கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், தலைமை தாங்கினார்.

    ஒன்றிய குழு துணை தலைவர் லட்சுமி லலிதா வேலன், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனசுந்தரம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகள், ஒன்றிய பொது நிதி கணக்குகள், மற்றும் கிராமப்புறங்களில் நடைபெற உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய குழு கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள், பிற துறை அலுவலர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொடர்ந்து 4 கிராமங்களுக்கு ஆய்வுக்கு சென்றார்
    • பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப்சிங் ஆய்வு செய்தார்.

    அப்போது துர்க்கைநம்மியந்தல், இனாம்காரியந்தல், நார்த்தாம்பூண்டி ஊதிரம்பூண்டி, தேவனாம்பட்டு, வடபுழுதியூர் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்படுத்துவதற்காக போடப்பட்டிருந்த நீர்க்கலத்தை ஆய்வு செய்தார்.

    இதன் பின்னர் இரவு ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார் தொடர்ந்து ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒன்றிய அலுவலக வளாகத்தை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து 4 கிராமங்களுக்கு ஆய்வுக்கு சென்றார்.

    பின்னர்அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினார்.

    • தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுவரும் கழிவறையினை தரமாகவும், விரைவாகவும் முடிக்க உத்தரவிட்டார்.
    • மேலும் பல்வேறு பணிகளை குறித்து ஆய்வு செய்து நடடிக்கை மேற்கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான இல.நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்ஆய்வில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உடனிருந்தார்.

    திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட, பாமணி ஊராட்சியில் ரூ.21.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தினையும், பாமணி ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டுவரும் கழிவறையினையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    திருத்துறைப்பூண்டி ஒன்றியம், பாமணி ஊராட்சி, அம்பேத்கர் காலணியில் 150 மீட்டர் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவருவதையும் ஆய்வு செய்து பணிகள் தொடர்பாக அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பாமணி ஊராட்சியில், ரூ.7.16 லட்சம் மதிப்பீட்டில் நெல் உலர்த்தும் கலம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் பாமணி ஊராட்சியில் அங்கான்வாடி மையத்திலுள்ள குழந்தைகளுடைய எடை, உயரம் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுவது குறித்து ஆய்வு செய்தார்.

    பாமணி ஊராட்சிக்குட்பட்ட செங்குந்தார் தெருவில் பாரத பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவது குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.

    அதனை தொடர்ந்து எடையூர் ஊராட்சிக்குட்பட்ட அரசினர் உயர்நிலைப்பள்ளியின் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு மாணவியர்களிடம் உணவு நல்ல முறையில் வழங்கப்படுகின்றனவா என்பதையும், அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்கின்றனவா என்பதையும் கேட்டறிந்தார்.

    எடையூர் ஊராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நோயாளிகள் குறித்த பதிவேடுகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார்.

    திருவாரூர் வட்டம், கூடூர் ஊராட்சி, மொசக்குளம் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளை சந்தித்து திட்டம் குறித்து ஆய்வு செய்தார். நன்னிலம் ஒன்றியம், முடிகொண்டான் சமத்துவபுரம் பகுதியில் பழுதடைந்த வீடுகளை புனரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இவ்ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பி.சந்திரா, வருவாய் கோட்டாட்சியர்கள் கீர்த்தனா மணி, சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவல ர்கள் உடனிருந்தனர்.

    • ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளில் அரசு சார்ந்த நடைபெற்று வரும் பணிகள் குறித்து நேற்று கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் சின்ன வேப்பம்பட்டு பகுதியில் 75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மகளிர் சுய உதவி குழு கட்டிட பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனைத் தொடர்ந்து கலந்திரா ஊராட்சியில் ரூ.1.53 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பண்ணை குட்டை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் அறிவழகன் என்ற விவசாயி ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு புதிதாக வேளாண்மை துறை சார்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள கதிரி 1812 ரக வே ர்க்கடலையை 2 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்ய ப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தபோது அந்த விவசாயிடம் வேர்க்கடலை மகசூல் குறித்து கேட்டபோது ஒரு வேர்க்கடலை செடியில் 100 முதல் 150 வேர்க்கடலைகள் காய்ப்பதால் அதிக மகசூல் கிடைப்பதாகவும் இந்த ரகம் புதிதாக இந்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து சின்னமோட்டூர் ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆயிரம் முருங்கை நாற்றுகள் உற்பத்தி செய்து வரும் பணிகள் குறித்தும், அதனை நடவை செய்வதற்கான கால வரையறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    மேலும் இந்த ஆய்வின்போது ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், முருகேசன், வேளாண்மை அலுவலர் ராதா உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நகராட்சி பகுதியில் ரூ.51 லட்சம் செலவில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்றது
    • ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்,

    தாராபுரம் :

    தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நகராட்சி பகுதியில் ரூ.51 லட்சம் செலவில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். விழாவிற்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். அதன்படி காமராஜபுரம், இறைச்சி மஸ்தான் தெரு, பூளவாடி ரோடு, நாடார் தெரு, மணியம்மை நகர், சித்தார்த்தன் பாளையம், நாச்சிமுத்து நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறுபாலங்கள் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது.

    அப்போது நகராட்சி ஆணையர் ராமர், நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர், நகராட்சி துணைத்தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் ராஜேந்திரன், துரை சந்திரசேகர், சக்திவேல், ஹைடெக் அன்பழகன், மலர்விழி கணேசன், ராசாத்தி பாண்டியன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×