செய்திகள்
மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால்

நீட் தேர்வில் 90 சதவீத மாணவர்கள் பங்கேற்பு - மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தகவல்

Published On 2020-09-13 18:50 GMT   |   Update On 2020-09-13 18:50 GMT
தமிழகம் உள்பட நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் பதிவு செய்தவர்களில் 85 முதல் 90 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதியதாக மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழகம் உள்பட நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்தது. இதில் பதிவு செய்தவர்களில் 85 முதல் 90 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இன்று (நேற்று) நடந்த நீட் தேர்வில் 85 முதல் 90 சதவீத மாணவர்கள் பங்கேற்றதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த தேர்வில் மாணவர்கள் பங்கேற்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை செய்த மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீட் தேர்வில் மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றிருப்பது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தில் அவர்களுடைய உறுதியையும், மனநிலையையும் பிரதிபலிப்பதாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News