செய்திகள்
வங்கி கணக்கு

கிசான் திட்ட மோசடியில் 82 போலி கணக்குகள் முடக்கம்

Published On 2020-09-12 08:02 GMT   |   Update On 2020-09-12 08:02 GMT
கொடைக்கானலில் கிசான் திட்டத்தில் மோசடியில் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு 82 போலி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:

தமிழகம் முழுவதும் கிசான் திட்டத்தில் சுமார் ரூ.110 கோடி அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக வேளாண் துறை செயலாளர் கூறியிருந்த நிலையில், மாநிலம் முழுவதும் இது சம்பந்தமாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

கொடைக்கானல் தாலுகா அளவில் கிசான் திட்டத்தில் 683 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 90 சதவீத கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இதுபற்றி தோட்டக்கலைத்துறை சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. முதற்கட்டமாக 82 கணக்குகள் மோசடியாக பதிவேற்றம் செய்யப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கணக்குகளில் செலுத்தப்பட்ட ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு இந்த 82 போலி வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 300 வங்கி கணக்குகளின் தன்மை குறித்து தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.



Tags:    

Similar News