செய்திகள்
கோப்புபடம்

மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2020-09-06 13:36 GMT   |   Update On 2020-09-06 13:36 GMT
மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகனூர்:

மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டு நடைபெற்று வருவதால் தனிப்பிரிவு தலைமை காவலர் செல்வராஜ், மற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மணல் திருட்டில் ஈடுபட்டு நீண்ட காலமாக போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தவர்கள் பற்றியும் கண்காணித்து வந்தனர். இதற்கிடையே நேற்று மாலை மோகனூர் நாவலடியான் கோவில் அருகே சவுக்கு தோப்பு பகுதியில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் மோகனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மலர்வண்ணன் (வயது 35), மோகனூர் தெற்கு தெருவை சேர்ந்த வாசு மகன் நடராஜன் (27) ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் மணல் கடத்தலில் ஈடுபட்ட அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ததோடு 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அங்கு நின்ற வாகனத்தை 1 யூனிட் மணலுடன் பறிமுதல் செய்தனர். கைதான 2 பேர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News