செய்திகள்
தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்

கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளம் மூலம் அறியலாம்- கலெக்டர் தகவல்

Published On 2020-09-05 09:52 GMT   |   Update On 2020-09-05 09:52 GMT
தேனி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட அனைவரும் தங்களின் பரிசோதனை முடிவை அறிந்து கொள்ளும் வகையில் புதிதாக இணையதள முகவரி தொடங்கப்பட்டுள்ளது.
தேனி:

தேனி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட அனைவரும் தங்களின் பரிசோதனை முடிவை அறிந்து கொள்ளும் வகையில் புதிதாக இணையதள முகவரி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏதுவாக அரசு நுண்ணுயிரியல் துறை மற்றும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் வாயிலாக www.thenicovid19results.com என்ற இணையதள முகவரி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் வாயிலாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் முழு பரிசோதனை முடிவுகளை அறிந்துகொள்ள ஏதுவாக அவர்களின் செல்போன் எண்ணிற்கு பரிசோதனைக்கான அடையாள எண் அனுப்பப்படும்.

இந்த இணையதள முகவரியில் செல்போன் எண் அல்லது பரிசோதனைக்கான அடையாள எண்ணை பயன்படுத்தி எளிய முறையில் பரிசோதனை முடிவுகளை அறிந்து, அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டவர்கள் இந்த இணையதளத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இத்தகவல் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News