செய்திகள்
கோப்பு படம்.

கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த மீனவர் மயங்கி விழுந்து பலி

Published On 2020-08-28 11:00 GMT   |   Update On 2020-08-28 11:00 GMT
கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த நாட்டுப்படகு மீனவர் படகில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பனைக்குளம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். சோகையன்தோப்பு, கிருஷ்ணாபுரம், புதுகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகுகளில் சென்று தினந்தோறும் விலை உயர்ந்த மீன், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன்களை பிடித்து மீன்மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணாபுரத்தில் இருந்து தங்கவேலு (வயது55) என்ற மீனவர் தனக்கு சொந்தமான நாட்டுப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்து படகிலேயே இறந்து கிடந்தார்.

அப்போது அந்த பகுதியில் மீன்பிடித்த அதே ஊரை சேர்த்த மீனவர் பாக்கியம் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது உடலை படகுடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மீனவரின் உறவினர்கள் கதறி அழுதனர்.

அழகன்குளம் கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ், தேவிபட்டினம் கடலோர போலீசார் விரைந்து வந்து மீனவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேவிபட்டினம் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News