search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர் பலி"

    • மீனவர்கள் விரைந்து சகாயராஜ் வள்ளத்தின் அருகே சென்றபோது வள்ளம் மட்டும் தனியாக நின்றது.
    • கோடிமுனை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    குளச்சல்:

    குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 58). சம்பவத்தன்று நேற்று மாலை 5 மணி அளவில் தனது வள்ளத்தில் தனியாக மீன்பிடிக்க சென்றார். இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்த வள்ளத்தின் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் அவரிடம் போனில் தொடர்பு கொண்டபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. உடனே மற்ற மீனவர்கள் விரைந்து அவரது வள்ளத்தின் அருகே சென்றபோது வள்ளம் மட்டும் தனியாக நின்றது.

    ஆனால் அவரை காணவில்லை. அவர் பிடித்து வைத்திருந்த மீன்கள் மட்டும் வள்ளத்தில் இருந்தது. உடனே மற்ற மீனவர்கள் சகாய ராஜை அருகில் சென்று தேடினர். அப்போது அவரது உடல் மிதந்த நிலையில் கடலில் கிடந்தது. உடனடியாக அவரது உடலை மீட்டு கோடிமுனை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சகாயராஜ் வள்ளத்தில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    • ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கடலில் வரும்போது படகில் இருந்த ஜவகர் தவறி கடலில் விழுந்தார்.
    • கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜவகர் ( வயது 29). மீனவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 வயதில் மகள் உள்ளனர்.

    இந்நிலையில் ஜவகர் கடந்த 7-ந் தேதி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து 8 பேருடன் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றார்.

    அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கடலில் வரும்போது படகில் இருந்த ஜவகர் தவறி கடலில் விழுந்தார். இதனை கண்ட சக மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து ஜவகரை மீட்டு அவரை படகில் ஏற்றினர். அப்போது ஜவகர் பேச்சு, மூச்சு இன்றி கிடந்துள்ளார்.

    இதனையடுத்து அவர்கள் விரைவாக படகை செலுத்தி தூத்துக்குடிக்கு அரசு மருத்துவமனைக்கு ஜவகரை கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜவகர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென முருகன் படகில் மயங்கி விழுந்து இறந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டிணத்தை சேர்ந்தவர் முருகன் (வயது45). உறவினர்களுடன் கடலுக்குள் படகில் மீன் பிடிக்க சென்றார்.

    நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென முருகன் படகில் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து சதுரங்கபட்டிணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சக்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவான்மியூர்:

    சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (28), மீன் பிடிக்கும் தொழில் செய்து வரும் இவர் தன்னுடைய நண்பரான ராஜேஷ் (38) மற்றும் ராஜேஷின் தந்தை குப்பன் ஆகியோருடன் (65) மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றுள்ளார்,

    அப்போது அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் மூவரும் கடலில் விழுந்தனர். இதில் படகுக்கு அடியில் சக்திவேல் மாட்டிக் கொண்டார். அதைத்தொடர்ந்து சக்திவேலை மீட்ட ராஜேஷ் மற்றும் குப்பன், அவரை கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அடையாறில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.,

    சக்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, வழக்கத்தை விட வேகமாக காற்று வீசியது.
    • வீரமணி மட்டும் கடலில் தலைகுப்புற கிடந்த படகை பிடித்து உயிர் தப்பினார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு, மீனவ கிராமத்தைச் சேர்ந்த வீர பிரதாப் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே ஊரைச்சேர்ந்த சின்னையன் மகன் ஞானபிராகாசம் (வயது 33), வீரமணி (50) ஆகியோர் நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன்படிக்க சென்றனர். காரைக்கால் மேடு கடற்கரையிலிருந்து கிழக்கே 4 நாட்டிகள் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போ து, வழக்கத்தை விட வேகமாக காற்று வீசியது. இதன் காரணமாக படகை கரைக்கு திருப்பினர். அப்போது, பலத்த காற்று வீசியதால் படகு தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் மீனவர்கள் இருவரும், கடலில் விழுந்து மாயமாகினர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, வீரமணி மட்டும் கடலில் தலைகுப்புற கிடந்த படகை பிடித்து உயிர் தப்பினார்.

    பிறகு படகை நிமிர்த்தி சரி செய்து, ஞானபிராகாசத்தை தேடினார். தேடியும் கிடைக்காததால், கரை திரும்பிய மீனவர் வீரமணி, நடந்த சம்பவத்தை சக மீனவர்களிடம் கூறினார். மாயமான மீனவர் ஞானபிராகாசத்தை தேடும் பணியில் ஐந்துக்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, அன்று இரவு காரைக்கால் மேடு கடற்கரைக்கு 200 மீட்டர் தொலைவில் கடலில் மீனவர் ஞானபிராகாசம் மிதந்து கொண்டிருந்தார். சக மீனவர்கள் ஞானபிராகாசத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்வம காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தூக்கி வீசப்பட்ட ஆண்டனி பிரகாஷ் படுகாயம் அடைந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் துறை பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி பிரகாஷ் (வயது 49) மீனவர். இவர் தற்பொழுது கன்னியாகுமரி லூர்து மாதா தெருவில் வசித்து வருகிறார்.

    நேற்று ஆண்டனி பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் ராஜாக்கமங்க லம் துறைக்கு வந்துவிட்டு கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்தார். ஈத்தாமொழி-புத்தளம் சாலையில் உள்ள நைனா புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஆண்டனி பிரகாஷ் படுகாயம் அடைந்தார்.

    அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஆண்டனி பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி ரமணி சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டனர். திருவனந்தபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் சுஜித் (50) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான ஆண்டனி பிரகாஷின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

    • மூர்த்தி மகன்களுடன் தங்களுக்கு சொந்தமான பைபர் படிகில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
    • தனியார் மருத்துவக் கல்லூரில ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம ்மரக்காணம் அருகே கோமுட்டி சாவடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45). இவருடைய 2 மகன்களான குமரேசன் (23), சுமன் ராஜ் (20) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான பைபர் படிகில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவர்களது பைபர் படகு கடலில் கவிழ்ந்தது. இதில் 3 பேரும் கடலில் தத்தளித்தனர். அதே பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.

    இதில் மூர்த்தி பலியானார். 2 மகன்களும் உயிர்பிழைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரில ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பூண்டி ஏரியில் தவறி விழுந்து மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த அரும்பாக்கம் இருளர் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது50). மீனவர். இவர் அதிகாலை மீன் பிடிப்பதற்காக பூண்டி ஏரிக்கு படகில் சென்றார்.

    அப்போது திடீரென மயங்கிய அவர் பூண்டி ஏரிக்குள் தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இன்று காலை அவரது உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இரவிபுத்தன் துறையை சேர்ந்த சூசைராஜ் என்பவர் படகில் மீனவர்கள் மீன்பிடித்து விட்டு தேங்காப்பட்டணம் வந்தனர்.
    • தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீனவரின் உடலை தேடினர்.

    கிள்ளியூர்:

    தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களும் கேரள மாநிலத்தை சேர்ந்த மீனவர்களும் வந்து படகுகள் மூலம் மீன் பிடித்து வருகின்றனர்.

    நேற்று இரவிபுத்தன் துறையை சேர்ந்த சூசைராஜ் என்பவர் படகில் மீனவர்கள் மீன்பிடித்து விட்டு தேங்காப்பட்டணம் வந்தனர். அந்த படகில் கேரளா மாநிலம் விழிஞ்ஞம் கடற்கரை கிராமத்தை சேர்ந்த ஜேக்கப் (வயது 45) என்ற மீனவரும் இருந்தார்.

    நேற்று மாலையில் துறைமுக படகு அணையும் தளத்தில் படகை நிறுத்திவிட்டு வெளியில் வந்துள்ளனர். இந்நிலையில் படகின் ஓரத்தில் நின்றபோது ஜேக்கப் தவறி கடலில் விழுந்துள்ளார்.

    ஜேக்கப்பின் அலறல் சத்தத்தை கேட்டு சக மீனவர்கள் ஓடி வந்து தேடினர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து புதுக்கடை போலீசுக்கும் குழித்துறை தீயைணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவலை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீனவரின் உடலை தேடினர். ஒரு மணி நேர தேடலுக்கு பின்னர் அவருடைய உடல் கிடைத்தது. பின்னர் அவருடைய உடல் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • படகில் இருந்து கிளைண்டன் தவறி விழுந்துவிட்டார்.
    • கிளைண்டனின் உடல் முயல்தீவு பகுதியில் மிதந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி போல்டன் புரத்தை சேர்ந்தவர் கிளைண்டன்(வயது 45). மீனவரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சக மீனவர்கள் 4 பேருடன் நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.

    அப்போது முயல்தீவு பகுதியில் எதிர்பாராத விதமாக படகில் இருந்து கிளைண்டன் தவறி விழுந்துவிட்டார். உடனே சக மீனவர்கள் அவரை மீட்க போராடினர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

    இதையடுத்து நேற்று 2-வது நாளாக தேடிய பின்னர் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்களும் நேற்று இரவு வரை தேடிய நிலையில் உடல் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் இன்று காலை கிளைண்டனின் உடல் முயல்தீவு பகுதியில் மிதந்தது. அதனை மீனவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    • பைபர் படகு கவிழ்ந்து 3 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
    • ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்தவர் எல்லப்பன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 58), முருகவேல் (40) மற்றும் எல்லையப்பன் ஆகிய 3 மீனவர்களும் வேதாரண்யம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 12 கடல்மைல் தொலைவில் நள்ளிரவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த நாகை அக்கரப்பேட்டை சேர்ந்த அனிதா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு எதிர்பாராத விதமாக பைபர் படகில் மோதியது. இதில் பைபர் படகு கவிழ்ந்து 3 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

    இதைத் தொடர்ந்து மோதிய விசைப்படகு சம்பவ இடத்திற்கு சென்று 3 மீனவர்களையும் மீட்டனர். அப்போது ராஜேந்திரன் என்ற மீனவர் தண்ணீரில் முழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது.

    உடனடியாக அருகே உள்ள கோடியக்கரை கடற்கரைக்கு ராஜேந்திரன் உடலையும், மற்ற 2 மீனவர்கள் எல்லையப்பன், முருகவேல் ஆகியோரை கொண்டு வந்து சேர்த்தனர். கடலில் முழ்கிய படகை மீட்க முடியவில்லை.

    இதுகுறித்து படகு உரிமையாளர் எல்லப்பன் வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    படகு மோதி மீனவர் உயிரிழந்த சம்பவம் மீனவர் கிராமங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விபத்தில் பலியான ராஜேந்திரனுக்கு மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டுப்படகு மூழ்கியதன் காரணமாக ரங்கநாதன் கடலில் மூழ்கி இறந்தார்.
    • மீனவர்கள் மரக்காணம் போலீஸ் நிலையம் மீன்வளத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வசவன் குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 50). இவர் இன்று அதிகாலை வழக்கம்போல் தனதுக்கு சொந்தமான நாட்டுப்படையில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய அவரது நாட்டு படகு கடலில் மூழ்கியது. இதனைப்பார்த்த அருகில் இருந்த சக மீனவர்கள் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.

    ஆனால் அவரது நாட்டுப்படகு மூழ்கியின் காரணமாக ரங்கநாதனும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். சிறிது நேரத்தில் உடல் கரை ஒதுங்கியது.

    இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் மரக்காணம் போலீஸ் நிலையம் மீன்வளத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×