புத்தளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மீனவர் பலி - கார் மோதியது

தூக்கி வீசப்பட்ட ஆண்டனி பிரகாஷ் படுகாயம் அடைந்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
புத்தளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மீனவர் பலி - கார் மோதியது
Published on

கன்னியாகுமரி :

ராஜாக்கமங்கலம் துறை பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி பிரகாஷ் (வயது 49) மீனவர். இவர் தற்பொழுது கன்னியாகுமரி லூர்து மாதா தெருவில் வசித்து வருகிறார்.

நேற்று ஆண்டனி பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் ராஜாக்கமங்க லம் துறைக்கு வந்துவிட்டு கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்தார். ஈத்தாமொழி-புத்தளம் சாலையில் உள்ள நைனா புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஆண்டனி பிரகாஷ் படுகாயம் அடைந்தார்.

அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஆண்டனி பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி ரமணி சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டனர். திருவனந்தபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் சுஜித் (50) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான ஆண்டனி பிரகாஷின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com