search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the fisherman died"

    • மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, வழக்கத்தை விட வேகமாக காற்று வீசியது.
    • வீரமணி மட்டும் கடலில் தலைகுப்புற கிடந்த படகை பிடித்து உயிர் தப்பினார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு, மீனவ கிராமத்தைச் சேர்ந்த வீர பிரதாப் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே ஊரைச்சேர்ந்த சின்னையன் மகன் ஞானபிராகாசம் (வயது 33), வீரமணி (50) ஆகியோர் நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன்படிக்க சென்றனர். காரைக்கால் மேடு கடற்கரையிலிருந்து கிழக்கே 4 நாட்டிகள் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போ து, வழக்கத்தை விட வேகமாக காற்று வீசியது. இதன் காரணமாக படகை கரைக்கு திருப்பினர். அப்போது, பலத்த காற்று வீசியதால் படகு தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் மீனவர்கள் இருவரும், கடலில் விழுந்து மாயமாகினர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, வீரமணி மட்டும் கடலில் தலைகுப்புற கிடந்த படகை பிடித்து உயிர் தப்பினார்.

    பிறகு படகை நிமிர்த்தி சரி செய்து, ஞானபிராகாசத்தை தேடினார். தேடியும் கிடைக்காததால், கரை திரும்பிய மீனவர் வீரமணி, நடந்த சம்பவத்தை சக மீனவர்களிடம் கூறினார். மாயமான மீனவர் ஞானபிராகாசத்தை தேடும் பணியில் ஐந்துக்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, அன்று இரவு காரைக்கால் மேடு கடற்கரைக்கு 200 மீட்டர் தொலைவில் கடலில் மீனவர் ஞானபிராகாசம் மிதந்து கொண்டிருந்தார். சக மீனவர்கள் ஞானபிராகாசத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்வம காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வீராணம் ஏரியில் மீன் பிடித்த மீனவர் இடி தாக்கி பலி ஆனார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சிட்டமல்லி கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 66). மீனவர். இவர் நேற்று மாலை வீரா ணம் ஏரியில் படகு மூலம் வலைவீசி மீன் பிடித்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. அந்த நேரத்தில் திடீரென இடி தாக்கியது. இதில் மீனவர் கோபி சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார்.

    தகவல் அறிந்த காட்டு–மன்னார்கோவில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று உடலை மீட்டனர். இதுகுறித்து சோழத்தரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி ஆனார்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே கீழ்அனுவம்பட்டு பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (35) இவர் நஞ்சைமகத்து வாழ்க்கை அருகே படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு உள்ள தண்ணீர் திறந்து விடும் ஷட்டர் அருகே மீன்பிடிக்கும் போது எதிர்பாராவிதமாக படகு நீரில் கவிழ்ந்ததில் ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதனையடுத்து இவரது மனைவி ராஜேஸ்வரி கிள்ளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ×