வீராணம் ஏரியில் மீன் பிடித்த மீனவர் இடி தாக்கி பலி

வீராணம் ஏரியில் மீன் பிடித்த மீனவர் இடி தாக்கி பலி ஆனார்.
இடிதாக்கி பலியான கோபி
இடிதாக்கி பலியான கோபி
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சிட்டமல்லி கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 66). மீனவர். இவர் நேற்று மாலை வீரா ணம் ஏரியில் படகு மூலம் வலைவீசி மீன் பிடித்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. அந்த நேரத்தில் திடீரென இடி தாக்கியது. இதில் மீனவர் கோபி சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார்.

தகவல் அறிந்த காட்டு–மன்னார்கோவில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று உடலை மீட்டனர். இதுகுறித்து சோழத்தரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com