என் மலர்
நீங்கள் தேடியது "படகு கவிழ்ந்து"
- படகில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
- தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் தத்தளித்தவர்களை மீட்டனர்.
கின்ஷாசா:
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. அந்நாட்டின் மைடொபி மாகாணத்தில் பெமி என்ற ஆறு பாய்கிறது.
இந்நிலையில், மைடொபி மாகாணம் இங்கான்கோ நகரில் இருந்து அண்டை நகருக்கு பெமி ஆற்றில் படகு ஒன்று புறப்பட்டது. அந்த படகில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
ஆற்றில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியதால் பாரம் தாங்காமல் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் தத்தளித்தவர்களை மீட்டனர். ஆனால், மேலும் சிலரின் நிலை இதுவரை தெரியாததால் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடலூர்:
சிதம்பரம் அருகே கீழ்அனுவம்பட்டு பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (35) இவர் நஞ்சைமகத்து வாழ்க்கை அருகே படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு உள்ள தண்ணீர் திறந்து விடும் ஷட்டர் அருகே மீன்பிடிக்கும் போது எதிர்பாராவிதமாக படகு நீரில் கவிழ்ந்ததில் ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து இவரது மனைவி ராஜேஸ்வரி கிள்ளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






